விளையாட்டு

மகளிர் 20 ஒவர் உலக கோப்பை இறுதிப்போட்டி - இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 7-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, மெல்போர்னில் இன்று பிற்பகல்12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன், முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி மோதுகிறது. இதனையொட்டி, ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு, பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படும் சாம்பியன் கோப்பையை, பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி அறிமுகம் செய்தார். அவருடன் இந்திய அணி வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சர்வதேச மகளிர் தினத்தில் நடைபெறும் இந்த போட்டியின் துவக்க நிகழ்ச்சியில், கேட்டி பெர்ரியின் பாடல் அரங்கேற உள்ளது. மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெறும் இந்த போட்டியை காண 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு