விளையாட்டு

CSG vs DD | திண்டுக்கல்லை திணறடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லையை திருப்பி போட்ட திருப்பூர்

CSG vs DD | திண்டுக்கல்லை திணறடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லையை திருப்பி போட்ட திருப்பூர்

thanthitv

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி பெற்றது.... திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல்லை சேப்பாக் அணி 126 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.... சேப்பாக் தரப்பில் அபிஷேக் தன்வர் மற்றும் அஷ்வந்த் வால்தாப்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்... தொடர்ந்து 127 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய சேப்பாக் அணியில் கேப்டன் ஜெகதீசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்... அவரின் சிறப்பான ஆட்டத்தால் 17வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் அடித்து சேப்பாக் இலக்கை எட்டியது.... கேப்டன் ஜெகதீசன் 58 பந்துகளில் 90 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்... நடப்பு சீசனில் சேப்பாக் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.... டிஎன்பிஎல் 10வது லீக் போட்டி திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது... முதலில் களமிறங்கிய நெல்லை அணியில் அதிகப்பட்சமாக முகிலேஷ் 46 ரன்களையும், சந்தோஷ்குமார் 43 ரன்களையும் விளாசினார்கள். நெல்லை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை எடுத்தது... 207 என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய திருப்பூர் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.... தொடக்க ஜோடியான அமித், துஷார் சிக்ஸ்ர்களும், பவுண்டரிகளும் விலாசினாகள். திருப்பூர் அணி பவர்பிளேயில் விக்கெட் இழக்காமல் 90 ரன்கள் குவித்து டி.என்.பி.எல். வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 என்ற இலக்கை எட்டி போட்டியை வென்றது திருப்பூர் அணி. அதிகப்பட்சமாக துஷார் 90 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்

AR Rahman Son | இன்று அதிகாலையில் ஏ.ஆர்.ரகுமான் மகனுக்கு நடந்த அதிர்ச்சி

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு