விளையாட்டு

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பென் ஸ்டோக்ஸ்..

தந்தி டிவி

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்சை 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. எனினும் கடந்த ஐபிஎல் சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே ஸ்டோக்ஸ் விளையாடினார். இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலக பென் ஸ்டோக்ஸ் முடிவெடுத்துள்ளார். அதீத பணிச்சுமை, எதிர்வரும் டி20 உலகக்கோப்பை, இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்