விளையாட்டு

Rohit Sharma | Kohli | அதலபாதாளத்தில் தூக்கி போட்ட BCCI - ரோஹித், கோலிக்கே இந்த கதியா?

ரோஹித், கோலிக்கே இந்த கதியா?

thanthitv

கோலி, ரோகித் சம்பளம் ரூ.7 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக குறைப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, 2025- 2026 ஆண்டுக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சீனியர் அணிகளுக்கான ஆண்டு வீரர் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் 'ஏ' பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் 'பி' பிரிவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், குல்தீப் யாதவ், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகிய 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் ஏழு கோடி ரூபாய் சம்பள வழங்கப்படும் 'ஏ பிளஸ்' பிரிவை இம்முறை பிசிசிஐ முற்றிலுமாக நீக்கியுள்ளது. 'ஏ பிளஸ்' பிரிவிலிருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் 'சி' பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரஷீத் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரெல், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ்குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் ரேணுகா தாகூர், சஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஸ்னே ரானா ஆகிய 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். சி பிரிவில் மொத்தம் 13 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்