விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்... இந்திய அணி நாளை அறிவிப்பு

தந்தி டிவி

வருகிற 30ம் தேதி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணித்தேர்வு டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. அணித்தேர்வில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மா வீடியோ கான்ஃபரஸ் மூலம் இதில் பங்கேற்க உள்ளார். செப்டம்பர் 5ம் தேதிக்குள் உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்க வேண்டும் என்பதால், நாளை அறிவிக்கப்பட இருக்கும் அணியே உலகக்கோப்பை தொடரிலும் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. இதனிடையே, அணிக்குத் திரும்பியுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு