விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்கதேசத்தை சுலபமாக வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இந்தப்போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் அந்த அணியின் மொகிதி ஹாசன் அதிகபட்சமாக 42 ரன்களும், கேப்டன் மோர்தாசா 26 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதில் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்தார். தவான் 40 ரன்களும், தோனி 33 ரன்களும் எடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்