வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கும் ஊர் மக்கள் - வேலையை ராஜினாமா செய்து CM-ஐ பார்க்க நடந்தே வரும் இளைஞர்கள்
கூடலூர் மக்களைக் காக்க வேலையை துறந்து 570 கி.மீ. நடக்கும் 2 இளைஞர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உலா வரும் புலி, சிறுத்தை மற்றும் காட்டு யானைகளிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் மற்றும் ஷியோன் ஆகிய இரண்டு இளைஞர்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கூடலூரில் தொடங்கிய இவர்களது 570 கிலோமீட்டர் நடைபயணம் கள்ளக்குறிச்சியை அடைந்த நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். செப்டம்பர் 20-ஆம் தேதி சென்னை சென்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.