அரசியல்

அரசியல் களத்தில் விஜயின் முதல் போராட்டம் - இத்தனை பேர் பங்கேற்பா?

தந்தி டிவி

திருப்புவனம் அஜித்குமார் உயிரிழப்பு - விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்

போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அஜித்குமார் உயிரிழப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த கோரியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் போராட்டம் என்பதால் இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் இதில் கலந்துக்கொள்கிறார்கள். சென்னை சிவானந்தா சாலையில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்குள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்