நடிகர் விஜய் இன்னும் அரசியலுக்கே வரவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திமுக, மக்களின் மனதை புரிந்து கொண்ட பின் அயிரத்து 1957ல் தான் தேர்தலில் நின்றுது என்றும் தெரிவித்தார்.