திராவிட கழக தலைவர் வீரமணி கூட்டத்தில் சில மதவாத சக்திகள் சென்று தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் மோடி ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு இதுவே சான்று என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இந்த தாக்குதல் ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தார். முன்னதாக காமன்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பிரசாரத்தை அவர் தொடங்கினார். முன்னாள் திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியினர் உடன் சென்றனர்.