பாலியல் புகாரில் த.வெ.க. மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் ஒருவர் கட்சியில் இணைவது தொடர்பாகத் தொடர்புகொண்ட நிலையில், த.வெ.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் மோகன் தன்னை ஆபாசப் படம் வைத்து மிரட்டுவதாக ஆற்காடு நகரக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்றும், ஆபாசப் படம் வைத்து மிரட்டியதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை என்றும் த.வெ.க. மாவட்டச் செயலாளர் மோகன் மறுப்புத் தெரிவித்துள்ளார்