18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்யாதது சரிதான் என்று சசிகலா கூறியதாக பெங்களூருவில் தினகரன் பேட்டியளித்துள்ளார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் சர்கார் திரைப்படம் நடுநிலையாக எடுக்கப்படவில்லை என்றும், அதே சமயம் ஆளுங்கட்சி அப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது தவறு என்றும், படத்திற்கு ஆளுங்கட்சியே விளம்பரம் தேடி தருவதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.