உச்ச நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ்.மற்றும் ஈ.பி.எஸ். அணிக்கு வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் இடைக்காலமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இரட்டை இலை வழக்கில் தினகரன் மேல்முறையீடு - செந்தில் ஆறுமுகம் கருத்து