அரசியல்

"கர்நாடக காங்கிரசில் எந்த பிளவும் இல்லை" - மாநில காங். தலைவர் சிவக்குமார் பேட்டி

கர்நாடக காங்கிரசில் எந்த பிளவும் இல்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி
கர்நாடக காங்கிரசில் எந்த பிளவும் இல்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இடையே அதிகார போட்டி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து டெல்லியில் விளக்கம் அளித்த சிவக்குமார், காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவும் இல்லை எனவும், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட மாட்டார் எனவும் தெரிவித்தார். மேலும் கர்நாடக பாஜகவில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், பாஜக நிர்வாகிகள் பலர் தன்னுடன் தொடர்பில் உள்ளதாகவும் சிவக்குமார் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு