அரசியல்

விஜயபிரபாகரனை ஆதரித்து சிவகாசியில் பட்டாசாக வெடித்த எடப்பாடி

தந்தி டிவி

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பட்டாசு தொழிலை பாதுகாக்க தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். கூட்டணி வைப்பவர்களை கைதூக்கி விடுவது அதிமுகவின் பண்பு என்றும் அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் அடையாளம் தெரியாமல் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் எங்கும் தன்னை பற்றியே பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். விஜய பிரபாகரனை

நல்ல மகனாக விஜயகாந்த் வளர்த்துள்ளதாகவும், விஜயபிரபாகரனை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார்.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது