அரசியல்

DK சிவக்குமாருடன்BJP எம்.பி திடீர் சந்திப்பு.. - ஆடி நிற்கும் அரசியல் களம்

தந்தி டிவி

கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்களை கர்நாடக பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா, கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாரை, பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் தேஜஸ்வி சூர்யா நேற்றிரவு சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. டி.கே.சிவகுமார் - தேஜஸ்வி சூர்யா சந்திப்பு குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதனிடையே, தேஜஸ்வி சூர்யா தன்னை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் டி.கே.சிவகுமார் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவருடன் பா.ஜ.க எம்.பி சந்தித்து பேசியது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்