அரசியல்

'சனாதன தர்மம்' - அமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு அமித்ஷா கண்டனம்

தந்தி டிவி

சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் 'பரிவர்தன் யாத்திரை'யை தொடங்கி வைத்து பேசிய அவர்,"இந்தியா கூட்டணி" இந்த நாட்டின் கலாச்சாரத்தையும், சனாதன தர்மத்தையும் அவமதித்து வருகிறார்கள் என்று கூறினார்.

திமுக நிர்வாகிகள் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என கூறுவதாகவும், கடந்த சில நாட்களாக சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் கையிலெடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்து மக்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் சனாதனத்தை அவமதிக்கிறார்கள் என்றும் அமித்ஷா கூறினார். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை விட, இந்து அமைப்புகள் மோசமானது என்று ராகுல் பேசுகிறார் என்றும், எதிர்கட்சிகளான "இந்தியா" கூட்டணியினர், இந்துக்களை வெறுப்பதாகவும் அமித்ஷா கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்