இதனிடையே, வெளிநடப்பு குறித்து மாநிலங்களவையில் பேசிய, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பல்வேறு துறைகளில் இருந்தும், அவைக்கு உறுப்பினராக வருவது வரவேற்கத்தக்கது என்றார். எம்.பியாக பதவியேற்றுக்கொண்ட ரஞ்சன் கோகாய், சிறப்பாக பணியாற்றுவார் என உறுதிபட நம்புவதாக கூறினார். அதே சமயம், புதிய உறுப்பினர்நியமனத்தை விமர்சித்து வெளிநடப்பு செய்வது முறையான செயல் அல்ல என்றும் அவர் கூறினார்.