அரசியல்

DMK | Nomination |வேட்பு மனு தாக்கல் செய்த ராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்

வேட்பு மனு தாக்கல் செய்த ராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்

thanthitv

வேட்பு மனு தாக்கல் செய்த ராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் #ramanathapuram #dmk #nomination #tnelection2026 #election #thanthitv ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்... வேட்பு மனு தாக்கலின்போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், "ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய 'மினி டைடல் பார்க்' அமைக்கப்படும்" என உறுதியளித்தார். மேலும், நீண்டகால மீனவர் பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் முழுமையான தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். ராமநாதபுரம் நகரின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா