அரசியல்

Rahul Gandhi vs Modi | திடீரென வீடியோவை இறக்கி அதிரவிட்ட ராகுல்

திடீரென வீடியோவை இறக்கி அதிரவிட்ட ராகுல்

thanthitv

ராகுல் காந்தி மீது நடவடிக்கை பின்வாங்க மாட்டோம் காங்கிரஸ் உறுதி எத்தனை வழக்குகள் போட்டாலும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பேன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தம்மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் வழக்குகள் பதியப்பட்டாலும் தொடர்ந்து விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடி நாட்டையும், விவசாயிகளையும் விற்றுவிட்டார் என்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட காலமாக இந்திய வேளாண்மை சந்தையை கைப்பற்ற முயன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வாயிலே பிரதமர் மோடி திறந்து விட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்‌. அமெரிக்க அதிபர் கொடுக்கும் அழுத்தத்தால் பிரதமர் மோடி இவ்வாறு செயல்படுவதாகவும், விரைவில் இந்தியாவின் மொத்த வேளாண்மை சந்தையும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு விடப்படலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் முழுக் காங்கிரஸ் கட்சியும் விவசாயிகளுடன் நிற்பதாகவும், இந்த அநீதியை தங்களால் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"