அரசியல்

"பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் நிகழ்வுகள்"- காங். தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
பாஜக ஆளும் மாநிலங்களில், பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற ராஜீவ் பவன் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என்றார். பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள், அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி, எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

TVK VIjay | பரபரப்பான பொள்ளாச்சி விடியோ.. ஆவேசமான விஜய்

Asha Bhosle | Funeral | மௌனித்த ஆஷா போஸ்லேவின் இன்னிசைக் குரல் - இதயத்தை உருக்கும் இறுதி ஊர்வலம்

Chennai | சென்னையில் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை..

Jana nayagan Release | ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு? - ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்

Chennai Voting | சென்னையில் 3 நாட்கள் வாக்குப்பதிவு - வெளியான தகவல்