அரசியல்

வார்த்தையை விட்ட பிரியங்கா காந்தி - வெளுத்து வாங்கிய அனுராக் தாக்கூர்

வார்த்தையை விட்ட பிரியங்கா காந்தி - வெளுத்து வாங்கிய அனுராக் தாக்கூர்

thanthitv

பிரதமர் மோடியின் கல்விச் சீர்திருத்தக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி குறித்து பிரியங்கா காந்தி விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பாஜக எம்பி அனுராக் தாக்கூர் காட்டமாகப் பதிலளித்துள்ளார். மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி , கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசியத் தேர்வுகள் முகமை பணிகளுக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில், மாட்டுக் கோமியம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்பி அனுராக் தாக்கூர், ஒருவர் செயற்கை நுண்ணறிவு நிபுணராக இருப்பதோடு, மாட்டுக் கோமியம் குறித்து ஆய்வு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆய்வுகள் மீது ஒவ்வாமை இருப்பதாகக் குற்றம்சாட்டிய அனுராக் தாக்கூர், பிரியங்கா காந்தியின் இந்த விமர்சனத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்

PMK | அன்புமணியின் அரசியல் வாழ்க்கையில் அதிமுக்கிய நாள் - ராமதாஸின் முடிவால் திருப்பம்

Senthilbalaji Case | செ.பாலாஜிக்கு அடுத்த பேரிடி - வீடு தேடி வந்த அதிகாரிகள்

Mettur Accident | லாரி, பிக்கப் வேன், அரசு பேருந்து ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து

Madurai | மதுரை அழகர் கோவில் திருவிழாவில் பரபரப்பு..தேர் கிளம்பும் நேரத்தில் வெடித்த பிரச்சனை

CM Vijay | பெண்களுக்கு புதிய திட்டம்.. காலையிலேயே ஆக்‌ஷனில் இறங்கிய CM விஜய்