அரசியல்

"சக்திக்காக உயிரையும் கொடுப்பேன்".. உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர்

தந்தி டிவி

எதிர்வரும் தேர்தல் சக்தியை அழிக்க நினைப்போருக்கும் வழிபடுவோருக்கும் இடையிலான தேர்தல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஜக்தியால் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சியும் காங்கிரஸும் குற்றங்களில் கூட்டாளியாக இருப்பதாகக் கூறினார். மோடி சக்திக்கு எதிரானது தங்களின் போராட்டம் என எதிர்க்கட்சிகள் கூறுவதாகக் கூறிய அவர், தன்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தாய்மார்களும் மகள்களும் சகோதரிகளும்தான் சக்தியின் வடிவம் எனக் குறிப்பிட்டார்.

நடைபெறும் தேர்தல் சக்தியை அழிக்க நினைப்போருக்கும் சக்தியை வழிபடுவோருக்கும் இடையிலான தேர்தல் எனக் குறிப்பிட்ட பிரதமர், சக்தியை பாதுகாக்க தன்னுடைய உயிரையும் கொடுக்க தான் தயாராக இருக்கிறேன் என்றார். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்களுக்கு பின்னால் குடும்ப அரசியல் கட்சிகளே உள்ளதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்