Chennai | Min. Rajmohan | Apollo Hospital | Awareness | மாணவிகளுக்கு உடல் வலிமை மிக அவசியம் - அமைச்சர் ராஜ்மோகன்
அப்போலோ மருத்துவமனை சார்பில் பள்ளியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், அப்போலோ மருத்துவமனை சார்பில் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களிடையே பேசுகையில், மாணவிகளுக்கு மன வலிமையைப் போலவே உடல் வலிமையும் மிக அவசியம் என்றும், பள்ளிகளில் ஒரு உடற்பயிற்சி வகுப்பைக் கூட ரத்து செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டே அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு நாளிலிருந்து ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், பக்கவாத சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 'FAST' என்ற மனித சங்கிலி வடிவத்தைச் அமைத்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
#chennai #MinisterRajmohan #apollohospital #thanthitv