அரசியல்

எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதி மறுப்பு - பெங்களூருவில் திக் விஜய்சிங் தர்ணா

பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி

பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அங்கு சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சாலையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்