அரசியல்

Salem | Protest | அடுத்தடுத்து போராட்டத்தில் குதித்த கட்சிகள் | உடனே நிகழ்ந்த மாற்றம்

அடுத்தடுத்து போராட்டத்தில் குதித்த கட்சிகள் | உடனே நிகழ்ந்த மாற்றம்

thanthitv

Salem | Protest | அடுத்தடுத்து போராட்டத்தில் குதித்த கட்சிகள் | உடனே நிகழ்ந்த மாற்றம் #salem #protest #Tasmac #thanthitv நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை திறப்பு - போராட்டத்தால் உடனே மூடல் சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை, பா.ம.க கட்சியினர் போராட்டத்தால் சில மணி நேரத்திலேயே மூடப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் நிறைந்த இந்தப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கிராமச் சாலையாக காட்டி கடை திறக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. மேலும் கடை திறந்த ஒரு மணி நேரத்திலேயே போதை நபர்களால் இரண்டு விபத்துகள் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாமக எம்.எல்.ஏ அருள் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் குதித்த நிலையில், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு