அரசியல்

பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம் - சுதாகர் ரெட்டி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சென்னையில் சந்தித்தனர்.

தந்தி டிவி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சென்னையில் சந்தித்தனர். ஆழ்வார் பேட்டை இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தல், பாஜகவுக்கு எதிரான வியூகம் , தேசிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, தற்போது உள்ள சூழலில் பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்