தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த கூடாது என்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியதாக கூறுப்படுகிறது. மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.