அரசியல்

தெலுங்கானாவில் " ராஜன்ன ராஜ்யம்" புதிய கட்சி துவங்க நடவடிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். இது குறித்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தமது இல்லத்தில், நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஒய்.எஸ். ஷர்மிளா ஆலோசனை நடத்தினார் . இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, ஒருங்கிணைந்த ஆந்திராவில் தமது தந்தையின் ராஜன்ன ராஜ்ஜியம் இருந்ததாக கூறினார். தெலுங்கானா மாநிலத்தில் அவ்வாறு இல்லை என்றும், தெலுங்கானாவிலும் அவ்வாறு அமைய வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஷர்மிளாவின் இந்த அறிவிப்புக்கு, தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்