அரசியல்

17ஆவது மக்களவையின் முதல் மற்றும் பட்ஜெட் கூட்டம் நாடாளுமன்றம் ஜூன் 17 ஆம் தேதி கூடுகிறது

வரும் ஜூன் 20 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

தந்தி டிவி

17ஆவது மக்களவையின் முதல் மற்றும் பட்ஜெட் கூட்டம், வரும் ஜூன் 17 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். வரும் 19-ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்றும், மறுநாள் நடைபெறும் நாடாளுமன்ற இருஅவைகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளதாகவும் அமைச்சர் ஜவடேகர் கூறினார். இதனை தொடர்ந்து ஜூலை நான்காம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்