அரசியல்

Mettupalayam MLA | கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ சுனில் ஆனந்த்

கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ சுனில் ஆனந்த்

thanthitv

Mettupalayam MLA | கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் #mettupalayam #TVK #MLA #ThanthiTV கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நான்கு ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த கழிவுநீர் வாய்க்காலை எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக தூர்வார நடவடிக்கை மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் நகராட்சி 7-வது வார்டு எஸ்.எம். நகர் பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால், நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் மண் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, த.வெ.க. கட்சி நிர்வாகிகளுடன் அப்பகுதிக்கு சென்ற சுனில் ஆனந்த், கழிவுநீர் வாய்க்காலை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளை தொடர்புகொண்ட எம்.எல்.ஏ., உடனடியாக ஜே.சி.பி. இயந்திரங்களை வரவழைத்து, நீண்டகாலமாக கிடப்பில் இருந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் பேசிய சுனில் ஆனந்த், கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் நலப் பிரதிநிதிகள் முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். மக்கள் பணி செய்யாதவர்கள் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இனி அனைத்து பகுதிகளிலும் த.வெ.க. நிர்வாகிகள் களத்தில் இறங்கி, மேட்டுப்பாளையம் நகரை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்

TN Housing Board | அவகாசம் நீட்டிப்பு.. வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு

Minister Aadhav Arjuna | "விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி

By-election | Maduranthakam | இடைத்தேர்தல் எதிரொலி.. செங்கல்பட்டு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

DMK | தேசிய அளவில் இறங்கிய திமுக.. கனிமொழி அதிரடி மூவ்

BREAKING || CBSE பள்ளி மாணவர்கள் தொடர்பான மிக முக்கிய வழக்கு - உச்ச நீதிமன்றம் கொடுத்த ஐடியா