அரசியல்

வாசலுக்கே வந்து முதல்வர் செய்த செயல்.. அப்படியே உருகிப்போன பழ.நெடுமாறன்

தந்தி டிவி

தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்கள் முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்த திரு. பழ.நெடுமாறன் அவர்களை வரவேற்று கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்று அய்யா நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க விடுத்த அழைப்பினை ஏற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (11.11.2024) அவருடைய முகாம் அலுவலகத்திற்கு உலகத் தமிழ்ப் பேரமைப்பின் நிறுவனரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான திரு.பழ. நெடுமாறன் அவர்கள் வருகை வந்தார்கள்.

அப்பொழுது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியே வந்து திரு.பழ.நெடுமாறன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். இன்முகத்துடன் வரவேற்று, கைத்தாங்கலாக

அப்பொழுது திரு பழ. நெடுமாறன் அவர்கள் 29.12.2024 அன்று

‌சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது என்றும் அவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திரு.பழநெடுமாறன் அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, நிகச்சியில் பங்கேற்பதாக உடனடியாக இசைவு தெரிவித்ததுடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மலரை வழங்கினார்கள்.

அதன் பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமிருந்து விடைபெற்று புறப்பட்ட திரு.பழ.நெடுமாறன் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் அவரைக் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்து அவருடைய காரில் வழியனுப்பிவைத்தார்கள்.

அப்பொழுது, விழா ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி திரு.த.மணிவண்ணன். திரு.வே. வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Brics | PM Modi | Malaysia | தானே வழிக்கு வந்த மலேஷியா.. மெகா ஜாக்பாட்-ஐலாக் செய்த இந்தியா..!

BRICS Summit 2026 | "உலக நாடுகள் வரக்காரணமே இதற்குதான்" - பேராசிரியர் திருமாறன் விளக்கம்

BRICS Summit | PM Modi | பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த அடுத்த VVIP.. கட்டித்தழுவி வரவேற்ற PM மோடி

CM Vijay | BreakFast Scheme | லண்டனில் CM விஜய்.. தள்ளிப்போகிறதா காமராஜர் காலை உணவு திட்டம்?

CM Vijay | Ajithkumar | இணையும் CM விஜய் அஜித்குமார்.. லண்டனிலும் நியூ ரெக்கார்டு