அரசியல்

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை - மம்தா

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பிரதமர் மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அதை மறுத்துள்ள அவர், பதவியேற்பு விழா அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கலவரங்கள் தமது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே