மகாராஷ்டிராவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்களின் அவசர ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முதலமைச்சராக பதவியேற்ற பட்னாவிஸ்க்கு வாழ்த்து தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.