அரசியல்

"விரைவில் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வைகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருந்து தூய்மைப் பணிகளை துவக்கி வைத்த அவர், சீர்மிகு மதுரை என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். பாலங்களின் கட்டுமானம் மற்றும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இரண்டும் நிறைவுபெற்றவுடன், போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என செல்லூர் ராஜூ கூறினார். இந்தப் பணி, வரும் டிசம்பருக்குள் முடிவடையும் என்று கூறி, 'ஸ்மார்ட் சிட்டி மதுரை' எனும் செயலியையும் துவக்கி வைத்த அவர், மதுரை சிட்னி நகராக மாறும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்