அரசியல்

அழைப்பை ஏற்ற ராகுல்.. மோடியின் முடிவு என்ன?

தந்தி டிவி

மக்களவைத் தேர்தல் தொடர்பான பொது விவாதத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்ற ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் விவாத‌த்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பான பொது விவாதத்திற்கு வருமாறு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான மதன் லோக்கூர், அஜய் ஷா உள்ளிட்டோர் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த பொது விவாத அழைப்பை ஏற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்காக, பிரதான கட்சிகள் நாட்டுக்கான தங்களது தொலைநோக்கு சிந்தனையை ஒரே தளத்தில் முன் வைப்பதற்கு, ஆக்கபூர்வ முன்னெடுப்பாக இது இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த பொது விவாத‌த்திற்கு பிரதமர் மோடியும் பங்கேற்க வேண்டும் என நாடு எதிர்பார்ப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி பங்கேற்க விருப்பம் தெரிவித்தால், விவாதத்திற்கான வடிவம் மற்றும் விவரங்கள் குறித்து ஆலோசிக்கலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..