dmk | karur | குளித்தலை திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் தீவிர பிரசாரம் #dmk #karur #tnelection2026 #electionswiththanthitv #thantitv கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், கூடலூர் மற்றும் கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட 35 கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதன்முதலில் வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், உதயசூரியன் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். வாக்குச் சேகரிப்பின் போது, மகளிருக்கு உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். வழிநெடுகிலும் பெண்களுக்கு ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு திரளாக வாக்குகளைச் சேகரித்தனர்.