அரசியல்

Kanimozhi | DMK | `ரூட்’ போடும் கனிமொழி.. உருவாகும் புதிய அணி?

`ரூட்’ போடும் கனிமொழி.. உருவாகும் புதிய அணி?

thanthitv

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தேசிய அளவில் அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசி வருவது அரசியல் தளத்தில் கவனம் பெற்றுள்ளது..... தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை கனிமொழி நேரில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மூன்றாவது அணி முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பின்போது வரவிருக்கும் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Erode | Fight | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதல்.. சரமாரியாக தாக்கிக்கொண்ட அதிர்ச்சி வீடியோ

Nilgiri Tiger | உள்ளே உறுமுவது மனித வேட்டையாடிய புலியா? வனத்துறை தீவிர ஆய்வு

BREAKING || வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? வந்தது நல்ல செய்தி

TN Housing Board | அவகாசம் நீட்டிப்பு.. வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு

Minister Aadhav Arjuna | "விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி