அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன், திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பகுதிக்கு சென்ற தினகரனுக்கு, முளைப்பாரி ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பேசிய தினகரன், தற்போது ஆட்சி செய்பவர்கள், ஜெயலலிதா வழியில் நடக்காததால் ஆர்கே நகரில் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறினார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எல்லாம், தற்போதைய ஆட்சியாளர்கள் ஆதரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.