'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓ.பன்னீர்செல்வம், 'காவிரி நாயகன்' எடப்பாடி பழனிசாமி
காவிரி நதிநீதி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஜல்லிக்கட்டு நாயகன் என்ற பெயர் எப்படி பன்னீர்செல்வத்திற்கு கிடைத்ததோ, அதுபோல காவிரி நாயகன் என்ற பெயர் முதலமைச்சர் பழனிசாமிக்கு நிச்சயமாக இருக்கும் என்றார்.