#vijay #tvk #tiruchendur இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என படிவத்தில் கையெழுத்திட்ட விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த தவெக தலைவர் விஜய், சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக, இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறி படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வருகை தந்த விஜய் அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்தார்... முன்னதாக, தான் கிறிஸ்தவர் என்பதால் சண்முக விலாச மண்டபத்தில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சட்டபடி படிவத்தில் கையெழுத்திட்டார். இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், கடவுள் மீது நம்பிக்கை வைத்து தரிசனம் செய்வதாகவும் படிவத்தில் கையெழுத்திட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் விஜய் வழங்கினார்.