MLA Kanimozhi Santhosh | "இளைஞர்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி" | KGFயை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ்
#coimbatore #TVKMLA #kanimozhisanthosh #thanthitv
இளைஞர்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி – கனிமொழி சந்தோஷ் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், இளைஞர்கள் அரசு நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ளும் வகையில், KGF எனப்படும் ஆறு மாத கால கவுண்டம்பாளையம் நிர்வாகப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள், எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷுடன் இணைந்து ஆறு மாதங்கள் பயணித்து, மக்கள் பிரதிநிதியின் அன்றாடப் பணிகள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை நேரடியாகக் கற்றுக்கொள்ள உள்ளனர். இதன் முதற்கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்துப் பேசிய கனிமொழி சந்தோஷ், கனவுகளுடனும் சமூக அக்கறையுடனும் வந்துள்ள இளைஞர்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்தப் பயிற்சி அரசு நிர்வாகத்தைப் புரிந்துகொள்ளவும், சமூகப் பொறுப்புகளை அறிந்துகொள்ளவும் இளைஞர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.