அரசியல்

தமிழக பாஜக-வின் அடுத்த தலைவர் யார்? 20ஆம் தேதி மையக் குழுக்கூட்டத்தில் முடிவு?

தமிழக பாஜக தலைவராக ஹெச். ராஜா அல்லது நயினார் நாகேந்திரன் இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் நியமிக்கப்பட்டதால், தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குள் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி நிரப்பப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் பா.ஜ.க. மையக் குழுக்கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம் குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் ஹெச். ராஜா மற்றும் நயினார் நகேந்திரன் இடையே போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேசிய செயலாளர், தேசிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வது குறித்தும் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்