அரசியல்

Govi Chezian | DMK | டீ போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் கோவி.செழியன்

thanthitv

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கோவி. செழியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவிசநல்லூர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின், அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருவிசநல்லூர் கடைவீதியில் வாக்கு சேகரித்தபோது, அங்குள்ள ஒரு டீக்கடைக்குச் சென்ற அமைச்சர், அங்கிருந்த டீ மாஸ்டருக்கு உதவியாகத் தானே தேநீர் தயாரித்துக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறையைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், அவருடன் உற்சாகமாக உரையாடினர்.. அப்போது, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வேப்பத்தூர், அம்மன்பேட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நின்ற ஈரான் போர்.. உலகம் முன் இந்தியா காட்டிய முதல் ரியாக்‌ஷன்

TVK Vijay | "உண்மையான காங்கிரஸ் யார் பக்கம்?" - ஒரே போடாக போட்ட விஜய்

TN Election 2026 | பரபரப்பாக தொடங்கிய தேர்தல் வேலை.. நேரடியாக இறங்கிய தேர்தல் ஆணையர்

Thiruparankundram | ``நீதிபதி GR.சுவாமிநாதன் விசாரிக்க தடை’’ - தி.குன்றம் வழக்கில் அதிரடி உத்தரவு

Puducherry | Election | நாளை தேர்தல்.. அனல் பறக்கும் புதுச்சேரி