மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதாலும் , மாநில அரசு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாலும் விவசாயிகள் பிரச்சனை தீர்ந்து விடாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் என்.எல்.சி. மூன்றாவது சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.