அரசியல்

"பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு உயர்வு" - அமைச்சர் தங்கம் தென்னரசு

தந்தி டிவி

தனி நபர் ஆண்டு வருமானம் இந்திய அளவை விட தமிழக அளவில் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில திட்டக் குழு அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக பொருளாதார வளர்ச்சியில் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி 2021 மற்றும் 2022- நிதி ஆண்டில் தமிழக அளவில் தனி நபர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ரூபாயாக இருந்ததாகவும், இந்திய அளவில் 92 ஆயிரத்து 583 ரூபாயாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 2022 மற்றும் 2023 நிதி ஆண்டில் தமிழக அளவில் தனி நபர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாய் என்றும், இந்திய அளவில் 98 ஆயிரத்து 374 ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு அளவில் உயர்ந்துள்ளதாக கூறினார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு