தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடுவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் 5வது நாள் வேட்பாளர் நேர்காணல் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கருணாநிதி காலத்திலிருந்தே நேர்காணல் நடைபெற்று வருவதால் அது தனக்கு புதிதல்ல என்று கூறினார்.