அரசியல்

"யார் சிறந்த அறிவாளி என பார்த்துவிடலாம்"

டாக்டர் அன்புமணிக்கு, டாக்டர் தமிழிசை சவால்

தந்தி டிவி

தமிழக அரசியலில் யார் சிறந்த அறிவாளி? என்பதை முடிவு செய்ய,

பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை நேருக்கு நேர் விவாதத்தில் பார்த்து விடலாம் என்றார்.

டாக்டர் தமிழிசைக்கு, டாக்டர் அன்புமணி பதிலடி

இதனிடையே, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தமது டுவிட்டர் வலைப்பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ள டாக்டர் அன்புமணி, மத்திய ஆட்சியில் பாமக அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை பட்டியல் போட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில், 16 முறை மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள டாக்டர் அன்புமணி, இது கூட தெரியாதவர், தேசிய கட்சியின் மாநில தலைவர் என பதிவிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல் வரலாறு தெரியாதவர், டாக்டர் தமிழிசை சவுந்திராஜன் என்றும் டாக்டர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை