PMK | Anbumani Ramadoss | TN Politics | "ஆவின் நிறுவனத்தை புதைகுழியில் தள்ளக் கூடாது.." - அன்புமணி ராமதாஸ்
#PMK #AnbumaniRamadoss #TNPolitics #Aavin
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பனீர், வெண்ணெய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாகப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் இருக்கும் ஆவின் நிறுவனத்திற்குத் தேவையான நிதியை மாநில அரசு வழங்க மறுப்பதே இதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், உற்பத்திப் பொருட்களைக் குறைப்பது ஆவின் நிறுவனத்தைப் புதைகுழியில் தள்ளுவதற்குச் சமம் என்றும் சாடியுள்ளார். கொள்முதல் மற்றும் விற்பனையை உயர்த்தி ஆவின் நிறுவனத்திற்குப் புத்துயிரூட்ட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்