அரசியல்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது

தந்தி டிவி

* தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

* வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவது, காவிரி நீர் கடைமடைக்கு செல்லவும், வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.

* பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்பது, காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம், குட்கா ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் மற்றும் டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்